மே 4 ரிலீஸ் உறுதி ஆன படங்கள்!- வீடியோ

  • 6 years ago
திரையுலகினரின் ஸ்ட்ரைக்குக்கு பிறகு வெளியாகும் படங்களின் ரிலீஸ் தேதிகளை தயாரிப்பாளர்
சங்கம் சார்பாக நியமிக்கப்பட்டிருக்கும் ஒழுங்குபடுத்தல் குழு ஒப்புதல் அளித்து ரிலீஸ் செய்து வருகிறது.

அதன்படி கடந்த இரண்டு வாரங்களாக படங்கள் வெளியாகி வருகின்றன. வரும் வாரம் மே 4-ம் தேதி
ரிலீஸ் செய்வதற்கு மூன்று படங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது தயாரிப்பாளர் சங்கத்தின் ஒழுங்குபடுத்தல் குழு.

'இருட்டு அறையில்' முரட்டு குத்து', 'அலைபேசி', 'காத்திருப்போர் பட்டியல்' ஆகிய படங்களை மே 4-ம்
தேதி ரிலீஸ் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

'ஹரஹர மஹாதேவகி' படத்தை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக்,
வைபவி சாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி ஆகியோர் நடித்துள்ள அடல்ட் காமெடி படம்
'இருட்டு அறையில் முரட்டு குத்து'. இந்தப் படத்திற்கு குடும்பத்தோடு யாரும் வரவேண்டாம் என
பத்திரிகையாளர் சந்திப்பிலேயே முரளி பாரதி இயக்கியிருக்கும் 'அலைபேசி' படத்தில் 'கல்லூரி' அகில், அனுகிருஷ்ணா ஆகியோர் நாயகன், நாயகியாக நடிக்கின்றனர். அலைபேசியால் உருவாகும் காதல்
எப்படியெல்லாம் பந்தாடப்படுகிறது, அந்தக் காதல் இணைந்ததா? இளைய சமுதாயத்தில் அலைபேசி
ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவற்றை மையப்படுத்திய கதையாம்.

'சென்னையில் ஒருநாள்' படத்தின் சச்சின், 'அட்டக்கத்தி நந்திதா நடிக்க டி.ராஜசேகர் என்பவர்
இயக்கும் படம் 'காத்திருப்போர் பட்டியல்'. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும், காத்திருக்கும் தருணங்களையும் அடிப்படையாகக் கொண்டு சுவாரஸ்யமாக இப்படம் உருவாகியிருக்கிறதாம்.

விஷாலின் 'இரும்புத்திரை', அருள்நிதியின் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' ஆகிய படங்கள் மே 11
ரிலீஸுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளன. அடுத்தடுத்து வெளியாகும் படங்கள் பற்றிய விவரம் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

Producer council's Regulatory Committee has approved three films for the release of May 4. May 4 tamil movie release list.

#alaipesi #kaathirupporpattiyal #iruttuaraiyilmorattukuthu

Recommended