இந்த வார ரிலீஸ் படங்கள் இவைதான்!- வீடியோ

  • 6 years ago
48 நாட்களாக நடைபெற்ற சினிமா ஸ்ட்ரைக் முடிவடைந்ததைத் தொடர்ந்து புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி

வருகின்றன. புதிய படங்களின் ரிலீஸ் தவிர, படத்தின் ஷூட்டிங், டப்பிங், எடிட்டிங், பட விழாக்கள்

ஆகியவையும் தொடங்கியுள்ளன.

ஸ்ட்ரைக்குக்கு பிறகு முதல் படமாக 'மெர்க்குரி' திரைப்படம் தமிழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை

வெளியானது. வாராவாரம் மூன்று படங்கள் என்கிற அளவில் வரிசையாகப் படங்கள் வெளியாகும் என

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வரும் வெள்ளிக்கிழமை என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆகும் என்பது தற்போது

அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்ப் படங்களின் ரிலீஸ் தேதிகளை திரைப்பட ஒழுங்குபடுத்தல் குழு முடிவு செய்து

வெளியிட்டுள்ளது.

வரும் ஏப்ரல் 27-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்', 'தியா' என பெயர் மாற்றப்பட்ட 'கரு'

திரைப்படம், 'பக்கா', 'பாடம்' ஆகிய படங்களை வெளியிட பரிந்துரைத்துள்ளது திரைப்பட ஒழுங்குபடுத்தல்

குழு.

மீதமுள்ள படங்களின் ரிலீஸ் தேதி 26-ம் தேதி நடைபெறவுள்ள தயாரிப்பாளர்/ விநியோகஸ்தர்/ திரையரங்கு

உரிமையாளர்கள் அடங்கிய முத்தரப்பு குழு மூலம் முடிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஷால், சமந்தா நடித்துள்ள 'இரும்புத்திரை' திரைப்படம் மே 11, அன்றும், ரஜினிகாந்த்தின் 'காலா'

திரைப்படம் ஜூன் 7 அன்றும் ரிலீஸ் ஆகவிருப்பது குறிப்பிடத்தக்கது.


The first film after the cinema Strike 'Mercury' was released last Friday. The

films will be released on coming Friday are 'Bhaskar oru Rascal', 'Thiya',

'Pakka' and 'Paadam'.

#newtamilmovie #release #bhaskarorurascal #karu

Recommended