அஜீத்தை பார்த்து சிரித்த மகள்- வீடியோ

  • 6 years ago
அஜீத் வித்தியாசமான போட்டி ஒன்றில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. அஜீத் தனது மகள் அனோஷ்காவின் பள்ளியில் நடந்த விழாவில் கலந்து கொண்டார். பள்ளியில் இருந்தபோது எடுக்கப்பட்ட அஜீத், ஷாலினி, அனோஷ்காவின் புகைப்படம் முதலில் சமூக வலைதளங்களில் வெளியானது. அஜீத்தை பார்த்த ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அஜீத் தனது மகளுக்காக டயர் ஓட்டும் போட்டியில் கலந்து கொண்டார். அவர் டயரை ஓட்ட முடியாமல் அல்லாட அதை பார்த்து அனோஷ்கா சிரித்தபோது எடுத்த வீடியோ வெளியாகியுள்ளது. அஜீத் டயர் ஓட்டும் போட்டியில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட வீடியோவை தல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியுடன் ஷேர் செய்து வைரலாக்கியுள்ளனர். சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் விசுவாசம் படம் குறித்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். சிவா ட்விட்டர் பக்கம் வருவார், அப்டேட் தருவார் என்று காத்திருக்கிறார்கள்.

A video of Ajith participating in tyre race in his daughter Anoushka's school function has gone viral. Ajith was seen struggling with tyre still he tried his level best.

Recommended