தினகரனுக்கு எதிராக பாஸ்கரனை களமிறக்கும் திவாகரன்- வீடியோ

  • 6 years ago
டிடிவி தினகரன் தன்னிச்சையாக செயல்படுகிறார். இதனை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் திவாகரன் திட்டமிட்டுள்ளார். இதற்காகவே தனது சம்பந்தி பாஸ்கரனை களமிறக்கியுள்ளாராம். தஞ்சை மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு புரட்சி பயணம் செய்தார் டிடிவி தினகரன். வரவேற்பு பிளக்ஸ் போர்டுகள் வைப்பதில் தினகரனுக்கும் அவரது சகோதரர் பாஸ்கரன் ஆதரவாளர்களுக்கும் இடையே பிரச்சினை உருவானது. தலைவன் பாஸ் பேரவை சார்பாக பாஸ்கரனும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யப்போகிறாராம். 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக கூறியுள்ளார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன் முதற்கட்டமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பயணம் செய்தார். அவரது குடும்பத்தினரே அவருக்கு எதிராக திரும்பியுள்ளனர். இதற்குக் காரணம் தினகரனின் நடவடிக்கைதானாம்.



TTV Dinakaran face to family politics.Sasikala brother Divakaran and Baskaran against TTV Dinakaran.

Recommended