மறுபடியும் KPY வருவேன் - சிவபாலன்!

  • 6 years ago
விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகும் 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சி பல கலைஞர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற பலர் திரைப்படங்களிலும் வாய்ப்பு பெற்றிருக்கிறார்கள். 'கலக்கப்போவது யாரு' சீசன் 7 சமீபத்தில் நிறைவடைந்தது. இதில் நான்காம் இடம் பெற்றது சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த சிவபாலன் - புவனேஷ்வரி ஜோடி. விரைவில் அடுத்த சீசன் தொடங்கவிருக்கிறது. KPY மூலம் பயங்கர பிரபலமாகியிருக்கும் சிவபாலனிடம் பேசினோம். சின்னத்திரையில் அவரது அடுத்தகட்ட முயற்சி பற்றி நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.
"விஜய் டி.வி-யில் 'கிங்ஸ் ஆஃப் காமெடி ஜூனியர்ஸ்' ப்ரோகிராம்ல கலந்துக்கிட்டேன். எங்க ஸ்கூல்ல படிச்ச ஒரு அண்ணா விஜய் டி.வி-யில வொர்க் பண்ணாங்க. அவர் சொல்லி முதல் ஆடிஷன் போய் செலக்ட் ஆகிட்டேன். செகண்ட் ஆடிஷன்ல அவுட். கடைசியா நடந்த ஒரு ஆடிஷன்ல ஸ்டாண்ட் அப் காமெடி பண்ணேன். அதில் செலக்ட் ஆகி ப்ரோகிராம்ல கலந்துக்கிட்டேன். கிங்ஸ் ஆஃப் காமெடி ஜூனியர்ஸ்ல செமி ஃபைனல் வரைக்கும் வந்தேன்."

Recommended