இயக்குனரின் பேச்சை கேளாமல் மோகன்லால் செய்த காரியம்..!!- வீடியோ

  • 6 years ago
ஒடியான் பட இயக்குனர் ஸ்ரீகுமார் சொல்லியும் கேட்காமல் மோகன்லால் ஒரு விஷயம் செய்துள்ளார். ஸ்ரீகுமார் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வரும் மலையாள படம் ஒடியான். இந்த படத்திற்காக மோகன்லால் தனது எடையை 18 கிலோ குறைத்து ஒல்லியாகியுள்ளார். அவர் எடையை குறைத்ததை பார்த்து அவரின் ரசிகர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.
ஒடியான் படத்திற்காக உடல் எடையை வெகுவாக குறைத்துள்ள மோகன்லாலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளனர். மேலும் பல பிரபலங்களும் மோகன்லாலை பாராட்டியுள்ளனர்.
ஒடியான் படத்தில் மோகன்லால் மீசை இல்லாமல் வர வேண்டுமாம். கம்ப்யூட்டர் கிராபிக்ஸை பயன்படுத்தி மீசையை நீக்கிவிடலாம் என்று இயக்குனர் ஸ்ரீகுமார் மோகன்லாலிடம் தெரிவித்துள்ளார்.
கிராபிக்ஸ் எல்லாம் வேண்டாம் என்று கூறிய மோகன்லால் தனது மீசையை ஷேவ் செய்துவிட்டாராம். ரியலாக தெரியவே மீசையை எடுத்துள்ளார் மோகன்லால். முன்னதாக இருவர் உள்ளிட்ட சில படங்களில் மீசையில்லாமல் அவர் நடித்துள்ளார்.
முன்னதாக எத்தனையோ இயக்குனர்கள் வெயிட்டை குறைக்குமாறு கூறியும் மோகன்லால் கேட்கவில்லை. ஆனால் அவர் ஸ்ரீகுமார் மற்றும் தனது கதாபாத்திரம் மீதான நம்பிக்கையால் தற்போது எடையை குறைத்துள்ளார் என்று அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.


Odiyan director Srikumar has told Mohanlal that they would use CGI to remove his moustache but the senior actor shaved his moustache to have real feel. It is noted that Mohanlal has shed 18 kilos for this movie.

Recommended