கமல் ஹீரோயின் கோவிலுக்குள் செய்த காரியம்!- வீடியோ

  • 6 years ago
பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள லிங்கராஜா கோவிலுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றார். இந்நிலையில் அவர் கோவிலுக்குள் வைத்து அழகு குறிப்புகள் கொடுத்த வீடியோ வெளியானது. வீடியோவை பார்த்த கோவில் நிர்வாகம் ரவீனா மீது போலீசில் புகார் அளித்தது. கேமரா கொண்டு செல்ல அனுமதி இல்லாத கோவிலுக்குள் ரவீனா விளம்பர படத்தை ஷூட் செய்துள்ளார். விதிகளை மீறிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது. கோவிலுக்குள் வைத்து ரவீனா அழகுக் குறிப்புகள் கொடுக்க அதை ஒருவர் செல்போனில் பதிவு செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அதன் பிறகே கோவில் நிர்வாகம் ரவீனா மீது புகார் அளித்தது.நான் எப்படி அழகாகவும், ஃபிட்டாகவும் உள்ளேன் என்று ஒருவர் கேட்டார். நான் பதில் சொன்னபோது அதை வீடியோ எடுத்தார். அவ்வளவு தான் என்று ரவீனா தெரிவித்துள்ளார்.

The authorities of Sri Lingaraj Temple has lodged an FIR against Bollywood actress Raveena Tandon for allegedly shooting an advertisement in the 'No Camera Zone' inside the premises of the 11th century and ASI protected lord Shiva shrine.

Recommended