ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா மீதான ஆசிட் வீச்சு வழக்கில் கைது செய்யப்பட்ட மதுசூதனன்!- வீடியோ

  • 6 years ago
அதிமுகவில் ஜெயலலிதா தலையெடுத்த பிறகு சென்னையில் அக்கட்சியினர் அரங்கேற்றிய அத்தனை அராஜகங்களிலும் அடிப்பட்டவர்தான் இன்றைய அதிமுக அவைத் தலைவரும் ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளருமான மதுசூதனன். குறிப்பாக தமிழகத்துக்கே ஆசிட் வீச்சு கலாசாரத்தை அறிமுகப்படுத்தியவர் என்கிற கடந்த கால வரலாற்றுப் பெருமை மதுசூதனனுக்கு உண்டு. 26 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார் அதிமுகவின் இன்றைய அவைத் தலைவர் மதுசூதனன். திமுகவிலிருந்து பிரிந்து வந்த பின்னர் எம்.ஜி.ஆர் அதிமுக என்ற தனிக்கட்சியை தொடங்கிய காலம் முதல் அதிமுகவில் வடசென்னையின் மூத்த முகமாக இருப்பவர்

எம்ஜிஆர் காலத்தில் திமுகவின் சைதை கிட்டுவுக்கு போட்டியாக தென்சென்னையில் சைதை துரைசாமி உருவாக்கப்பட்டார். அவரும் எம்ஜிஆரின் செல்லப்பிள்ளையாகவே இருந்தார். அதன்பின்னர்தான் ஆதிராஜாராம் போன்றவர்கள் தலையெடுத்தனர்.
அதேகாலத்தில் வடசென்னையில் மதுசூதனன் கோலோச்சிக் கொண்டிருந்தார். அதன்பின்னர்தான் பாலகங்கா, சேகர்பாபு, ஜெயக்குமார் தற்போது வெற்றிவேல் என அடுத்தடுத்து கோலோச்சுகின்றனர். அதுவும் அதிமுகவில் ஜெயலலிதா தலையெடுத்த காலங்களில் மன்னார்குடி குடும்பத்தின் திவாகரன், தினகரன் சபாரி போட்டுக் கொண்டு ஜெ.வுக்கு அருகில் இருந்திருக்கலாம்.

ADMK senior leader Madhusudhanan contested in the RK Nagar elections 26 years before and he took charge as Handloom minister in Jayalalitha cabinet at that period.

Recommended