ரஜினியின் அரசியல் வருகை ... முழு பேச்சும் இதோ

  • 6 years ago
வரும் சட்டசபை தேர்தலில் அதிரடியாக அரசியலில் இறங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ரஜினி தனது அரசியல் நிலைப்பாடு குறித்து இன்று அறிவிக்க போவதாக கடந்த 26-ஆம் தேதி தெரிவித்திருந்தார். இதனால் இன்று அவரது பேச்சை கேட்க ரசிகர்கள், தமிழகமே ஆவலாக இருந்தது. ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு வந்த ரஜினி, ரசிகர்கள் மத்தியில் பேசுகையில், நான் பில்ட்அப் கொடுக்கவில்லை, தானாக ஆகிவிட்டது. எனக்கு அரசியல் கூட பயமில்லை. மீடியாவை பார்த்தால்தான் பயம். பெரிய ஜாம்பவான்களே மீடியாவை பார்த்து பயப்படுகிறார்கள், நான் குழந்தை. சோ சார் எனக்கு மீடியாவிடம் ஜாக்கிரதையாக இருங்கள் என பயம்காட்டி வைத்திருந்தார். இப்போது சோ இருந்திருந்தால் எனக்கு 10 யானை பலமாக இருந்திருக்கும். சோ ஆத்மா எனக்கு பலமாக இருக்கும்.

கடமையை செய், மற்றதை நான் பார்க்கிறேன் என்றார் கண்ணன். யுத்தம் செய், வெற்றி பெற்றால் நாடாள்வாய். யுத்தத்தில் தோற்றால் இறப்பாய். யுத்தம் செய்யாவிட்டால் கோழை என்பார்கள். நான் எல்லாத்தையும் முடிச்சிட்டேன். இன்னும் அம்பு விடுவதுதான் பாக்கி. நான் அரசியலுக்கு வருவது உறுதி.. இது காலத்தின் கட்டாயம். வரப் போகும் சட்டமன்றத் தேர்தலில் நான் தனிக் கட்சி ஆரம்பித்து, தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நான் நிற்பேன். அதுக்கு முன்னாடி உள்ளாட்சித் தேர்தல் வருது. அதுக்கு நேரம் இல்லாததால போட்டியிடவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் முடிவெடுப்பேன்.

Here is the Rajini's full speech about his political entry. He officially announces that he will start new party and will compete in 234 constituencies

Recommended