ஜெயலலிதாவின் அறை தவிர சல்லி சல்லியாக சலித்த அதிகாரிகள் - கடித பண்டல்களை எடுத்துச்சென்றது ஏன்?

  • 7 years ago
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று நள்ளிரவில் 5 மணிநேரம் சோதனை நடத்தி 2 பென்டிரைவ், லேப்டாப், கடித பண்டல்களை கைப்பற்றி எடுத்துச்சென்றனர். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சோதனையில் அதிகாரிகள் கடித பண்டல்களை எடுத்துச்சென்றது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. சசிகலாவின் உறவினர்கள் மற்றும் பினாமிகளின் வீடுகள், அவர்களது அலுவலகங்கள் என கடந்த வாரம் வியாழக்கிழமை தொடங்கி 5 நாட்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.1012 கோடிக்கு வரிஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ரூ. 1400 கோடிக்கு சொத்து ஆவணங்கள், 7 கோடி ரொக்கம், ரூ. 5 கோடிக்கு தங்கம் மற்றும் வைர நகைகள் மேலும் ஏராளமான முக்கிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இது குறித்து தொடர்ந்து வருமான வரித்துறை அலுவலகத்தில் தினசரியும் விசாரணை நடந்து வருகிறது.

Officials from the Income Tax Department, on Friday night, carried out raids at Veda Nilayam,The official said a laptop was among the items seized during the raid.Unofficial sources said apart from the laptop, pen drives and letters

Recommended