சென்னையில் மழை நிலவரம் எப்படி?...வீடியோ

  • 7 years ago
தமிழகம் முழுவதும் நாளை முதல் மழையின் அளவு படிப்படியாகக் குறையும் என்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது : கடந்த நவம்பர் மாதம் 10ம் தேதி முதல்4 நாட்களாக தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சற்றுவலுப்பெற்று தொடர்ந்து அதே இடத்தில் நிலைபெற்று வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தை பொருத்தவரை தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு அடுத்த 2 நாட்களில் வடதிசையில் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக நாளை முதல் தமிழகத்தில் படிப்படியாக மழையின் அளவு குறையக்கூடும். அடுத்த 2 தினங்களைப் பொருத்தவரையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும். அடுத்த 2 நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னை மற்றும் புறநகரைப் பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடனும் ஒரு சில இடங்களில் மழையும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டம் எண்ணூரில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது. பொன்னேரி, நுங்கம்பாக்கம், மாதவரத்தில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னை டிஜிபி ஆபீஸ், கொளப்பாக்கம், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் 4 செ.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது என்று தெரிவித்தார்

Chennai Metrology predicts that rain will reduce all over tamilnadu from tomorrow and also added chennai may get heavy rain at some isolated places.

Recommended