காசி மேட்டில் ஸ்ட்ரா போட்டு தண்ணீரை உறிஞ்சுகிறதோ கார் மேகம்?-வீடியோ

  • 7 years ago
காசிமேடு கடற்கரையில் கருமேகங்கள் கடலில் இருந்து நீரை உறிஞ்சுவது போன்ற வீடியோ காட்சியொன்று, வைரலாகி வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் துவங்கியுள்ளது. இதனிடையே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது.இந்த வளி மண்டல மேலடுக்கு சுழற்சி இலங்கை அருகே நீடிக்கிறது. இதனால் தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.இந்நிலையில் காசிமேடு கடற்பகுதியில் கருமேகங்கள் திரண்டு கடலில் சுழல் மூலம் தண்ணீரை மேலே இழுப்பதை போன்ற காட்சி வெளியாகியுள்ளது.

மீனவர்கள் மொழியில் இந்த நிகழ்வை ‘யானை தும்பிக்கையை இறக்கி இருக்கிறது' எனச் சொல்வார்களாம்.ஆனால், அறிவியல் மொழியில் இதனை ‘டோர்னடோ' என பெயரிட்டு அழைக்கிறார்கள். அதாவது தமிழில் நீர்த்தாரை.
tornado அல்லது waterspout என்று கூறுவார்கள்.

‘கடலின் மேல் வீசும் காற்று குளிர்ந்த காற்றாகவும், கடலின் காற்று சற்று வெப்பமாகவும் இருந்தால், கடலில் நீர்த்தாரைகள் எனப்படும் அதிசய நிகழ்வு ஏற்படும். என கூறுகிறார்கள் அறிவியலாளர்கள்.

Waterspout spotted in the sea near in Chennai Kasimedu beach, this is looking like, Clouds drinking water in the sea near beach. This video becomes viral on social media.

Recommended