Skip to playerSkip to main contentSkip to footer
  • 7/3/2018
சென்னை கடற்கரை சாலையில் நூற்றுக்கணக்கான ஆளுயர பேருந்துகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு புதிதாக வாங்கப்பட்டுள்ள 542 பேருந்துகளின் சேவைத் தொடக்கவிழா சென்னையில் இன்று நடைபெற்றது. தலைமை செயலகத்தில் புதிய பேருந்துகளின் சேவையை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சென்னையில் இருந்து சேலம், விழுப்புரம், கரூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பேருந்து இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.

More than 500 buses standing on both sides of the Beach Road

Category

🗞
News

Recommended