சென்னையை எச்சரிக்கும் நார்வே வானிலை மையம்- வீடியோ

  • 7 years ago
பகல் 12 மணிக்குப் பிறகு கனமழை பெய்யும் என நார்வே நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. காலை முதல் சென்னையில் பரவலாக மிதமான மழை இருக்கும் என்றும் நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக சென்னை, காவிரி டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பின்னி பெடலெடுத்து வருகிறது. சென்னையில் குறிப்பாக இரவு நேரங்களில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இரண்டாவது நாளாக நேற்றிரவு கனமழை கொட்டியதில் சென்னையின் பல இடங்கள் தண்ணீரில் தத்தளித்து வருகிறது.இந்நிலையில் இன்று பகல் 12 மணிக்குப் பிறகு சென்னையில் மீண்டும் கனமழை கொட்டும் என நார்வே வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலை முதலே சென்னை மாநகர் முழுவதும் லேசானமழை பெய்யும் என்றும் நார்வே நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Norway government Meteorological site yr.no said heavy rain will be there in Chennai today afternoon. Yesterday also norway meteorological center warned for heavy rain it happened.

Recommended