எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக் கொடுக்கும் வகையில் அதிமுகவுடன் கூட்டணி இல்லையென நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வருகிற 21ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ளது. முதலாவது மாநாட்டில் பல லட்சம் தொண்டர்கள் குவிந்த நிலையில் மதுரையில் இதை விட இன்னும் பல மடங்கு தொண்டர்கள் வருவார்கள் என தவெக தரப்பு கணக்கிட்டுள்ளது. இதனை தொடர்ந்து செப்டம்பர் மாதம் முதல் விஜய் தமிழகம் முழுவதும் மக்களை சந்திக்கும் பயணத்தை தொடங்கவுள்ளார்.