கோவில் நிதியில் கல்லூரி கட்டுவதில் பாஜகவிற்கு உடன்பாடு இல்லை எனவும்,ராமதாசும், அன்புமணி இருவரும் இணைந்திருந்தால் கண்ணிற்கு அழகாக இருக்கும் எனவும் எச்.ராஜா தெரிவித்தார்.பல்வேறு நிகழ்ச்சிகளை கலந்து கொள்வதற்காக கும்பகோணத்திற்கு வருகை தந்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.பெரியவர் ராமதாஸ் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் மிகப்பெரிய மரியாதை உள்ளது. எனவே ராமதாசும், அன்புமணி இருவரும் இணைந்திருந்தால் கண்ணிற்கு அழகாக இருக்கும்.