புகைப்படங்களை நீக்கியது குத்தமா? குமுறிய அசின்!

  • 11 months ago
நடிகை அசினுக்கும் மற்றும் அவரது கணவர் ராகுல் சர்மாவுக்கும் விவாகரத்து என செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. அசின் தனது சமூகவலைதள பக்கத்தில் இருந்து தனது கணவருடனான புகைப்படங்களை நீக்கியுள்ளது இந்த செய்தி பரவ முக்கிய காரணம். இந்தநிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசின் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.
’விவாகரத்து செய்து விட்டோமா?’: நடிகை அசின் விளக்கம்!
’விவாகரத்து செய்து விட்டோமா?’: நடிகை அசின் விளக்கம்!
அதில் அவர், ‘இப்போது நாங்கள் கோடை விடுமுறையில் இருக்கிறோம். எங்களின் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டுக் கொண்டே உண்மையற்ற இதுபோன்ற கற்பனையான செய்திகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். எங்களது திருமண நாள் குறித்து குடும்பத்துடன் நாங்கள் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் போது இதுபோன்ற செய்திகள் வரவேண்டுமா? வேறு எதாவது நீங்கள் சிறப்பாக செய்யலாம். இந்த செய்திக்கு விளக்கம் கொடுத்து எனது கோடை விடுமுறையில் ஐந்து நிமிடத்தை வீணடித்துள்ளேன்’ எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Website: https://kamadenu.hindutamil.in
Facebook : https://www.facebook.com/kamadenutamil/
Twitter : https://twitter.com/KamadenuTamil
Sharechat : https://sharechat.com/KamadenuTamil
Instagram : https://www.instagram.com/kamadenutamil/
Kooapp : https://www.kooapp.com/profile/kamadenutamil/

Recommended