கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரை அடுத்த மணலூர்பேட்டையைச் சேர்ந்தவர் ஓவியர் சு.செல்வம். நடிகர் அஜித்குமார் பிறந்தநாளை முன்னிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறும் விதமாக தன்னுடைய கைகளைப் பயன்படுத்தாமல் தன்னுடைய தலையில் தூரிகையைக் கட்டிக் கொண்டு 'தல'யின் படத்தை வரைந்துள்ளார்.
தல என்பதை குறிக்கும் விதமாக கைகள் பயன்படுத்தாமல் சிறுகம்பியில் வளையம் மாதிரி செய்து அதில் பிரஷ் வைத்துக் கொண்டு தன்னுடைய தலையில் மாட்டிக் கொண்டு தன் தலையை அசைத்து அசைத்து நீர் வண்ணத்தில் பிரஷால் தொட்டு 15 நிமிடங்களில் 'தல' படத்தை தலையால் வரைந்து அசத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "இன்றைய தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதை வென்ற முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் அஜித். இவர் தனது இளமைப் பருவத்திலிருந்தே ரேஸ் கார், பைக் ஓட்டுவதில் ஆர்வம் காட்டி மும்பை, சென்னை, டெல்லி போன்ற இடங்களில் நடந்த கார் ரேஸ்களில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.