இப்படியும் விழிப்புணர்வை ஏற்படுத்தலாமா?

  • 4 years ago
இந்த விழிப்புஉணர்வு நிகழ்ச்சியைத் தலைமையேற்று நடத்தும் முத்துசாமி என்பவரிடம் பேசினோம். ``சார், நாங்களெல்லாம் சென்னையில் இயங்கிவரும் `அகம்' கூத்துப்பட்டறையைச் சேர்ந்தவங்க. சென்னையில் பத்து வருஷமா இந்தக் கூத்துப்பட்டறையை நடத்திக்கிட்டு வர்றேன். டூவீலர் ஓட்டுபவர்கள் ஹெல்மெட்டும், கார் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட்டும், மது அருந்தாம வாகனங்களை ஓட்டணும்னு சொல்லி விழிப்புஉணர்வு நிகழ்ச்சி நடத்த ஆரம்பிச்சோம். முத்துசாமிஅதோடு, தற்கொலை பண்ணிக்கொள்வதைத் தடுக்க, பள்ளி-கல்லூரிகள்ல நடக்கும் ஈவ்டீஸிங் சம்பவங்களைத் தடுக்க, ஆண்-பெண்களுக்கிடையேயான தொடு உணர்வு, புரிதல் தன்மைனு எங்க `அகம்' கூத்துப்பட்டறை சார்பில் நாடகங்கள், பாடல்கள், இப்போ இங்க குணா பண்ணதுபோல லைவ் நிகழ்ச்சிகள் மூலமா விழிப்புஉணர்வு ஏற்படுத்தத் தொடங்கினோம்

Recommended