டெல்லி, பஞ்சாபில் நிலநடுக்கம் | இப்படியும் விளம்பரம் செய்கிறார்கள்- வீடியோ

  • 6 years ago
டெல்லி உட்பட நாட்டின் வடமாநிலங்களில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் வீடுகள், அலுவலகங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப்பகுதியை மையமாக கொண்டு இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.2 ஆக பதிவாகி இருந்தது.|ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேரும்படி பாஜக உறுப்பினர் ஒருவர் அசாமில் விளம்பரம் கொடுத்து இருக்கிறார். மக்களிடையே பிரச்சனையை உண்டாக்கி கலவரத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில் அவர் இப்படி செய்துள்ளார். கவுகாத்தி அருகே இருக்கும் நல்பாரி என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு இருக்கும் நிறைய கட்டிடங்களில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கொடிகளும், போஸ்டர்களும் ஒட்டப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேருங்கள் என்று விளம்பரம் செய்து இருக்கிறார்கள்.

Recommended