நடிகர் அஜித்தின் பிறந்தநாளுக்கு நேர்கொண்ட பார்வை பட அப்டேட் எதுவும் இருக்குமா இல்லையா

  • 5 years ago
விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கான இதனை போனிகபூர் தயாரிக்க, ஹெச். வினோத் இயக்குகிறார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. முதலில் அப்படம் மே ஒன்றாம் தேதி அஜித் பிறந்தநாளை ஒட்டி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் சில பல காரணங்களால் பட ரிலீஸ் ஆகஸ்ட்டுக்கு தள்ளிப் போய் உள்ளது.

#Ajith
#Thala60
#Thala59
#NerkondaParvai
#ThalaFans