ராகுலுக்கு கிடைத்த க்ளாப்ஸ்

  • 5 years ago
கே எல் ராகுல் தொடர்ந்து சொதப்புறார்;
சிட்னி டெஸ்ட்க்கு அவர டீம்ல சேத்ததே தப்புன்னு
கடுமையான விமர்சனம் வருது.

ராகுலுக்கே தன் மேல நம்பிக்கை கொறஞ்சுருச்சு.
அது டேஞ்சரான விசயம்.
ஆனா இந்த பிரச்னைகளுக்கு நடுவுல
திடீர்னு அவருக்கு செம க்ளாப்ஸ் கெடச்சிருக்கு.

மிட் ஆன் பொசிசன்ல ஃபீல்டிங்ல இருந்த ராகுல்
மார்க்கஸ் ஹேரிஸ் அடிச்ச பந்த பறந்துபோய் கேச் புடிச்சார்.
கீழ விழுந்து புரண்டாலும் எழுந்திருக்கும்போது
அவர் கைலதான் பந்து இருந்துது.

சூப்பர் கேச்னு நம்ம டீம் ஆலுகளும் ரசிகர்களும்
விசிலடிச்சு கைதட்டும்போது கையால சைகை காட்டி
கேச் இல்லை; பவுன்சாகி தரைய தொட்டிருச்சுன்னு
மெசேஜ் சொன்னார் ராகுல்.

எந்த கேமராவும் அவர் பந்த விட்டத கேப்சர் பண்ணல.
பந்தோட கைய ஒசத்தி இருந்தார்னா
அம்பயரும் கண்ண மூடிட்டு அவுட் குடுத்திருப்பார்.
ஹேரிஸே அத அப்ஜக்ட் பண்ணிருக்க மாட்டார்.

ஆனா ராகுல் ரொம்ப ஆனஸ்டா கேச் இல்லைனு சொன்னதும்
மொத்த ஸ்டேடியம் மட்டுமில்ல, அம்பயரே மெர்சலாய்ட்டார்.
“நீ ரொம்ப நல்லவண்டா..” ங்ற மாதிரி ராகுல பாத்து
தம்ஸ் அப் காட்னார் அம்பயர் இயான் கோல்டு Ian Gould.

ஆனஸ்டி அவ்ளோ அபூர்வமா ஆயிரிச்சி, வேறென்ன..

Recommended