கிடைத்த நல்ல வாய்ப்பையும் கெடுத்துக் கொண்ட வடிவேலு?- வீடியோ

  • 7 years ago

கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் ஆகிவிட்டன பழைய வடிவேலுவைப் பார்த்து. இந்த ஆறு ஆண்டுகளில் அவர் நடிப்பில் 7 படங்கள்தான் வெளியாகின. மம்பட்டியான், மறுபடியும் ஒரு காதல், தெனாலிராமன், எலி, கத்தி சண்டை, சிவலிங்கா, மெர்சல். இவற்றில் தெனாலிராமனும், எலியும் அவர் ஹீரோவாக நடித்தபடம். அவ்வளவுதானா வடிவேலு? இனி அந்த பழைய கைப்புள்ளயை, அமாவாசையைப் பார்க்க முடியாதா என்று அவரது ரசிகர்கள் ஏங்கிய நேரத்தில் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் அவர் நடிப்பதாக செய்தி வெளியானது. வடிவேலுவின் அட்ராசிட்டி தாங்க முடியாமல் ஷூட்டிங்கையே நிறுத்திவிட்டார் தயாரிப்பாளர் ஷங்கர் என்கிறார்கள். வடிவேலுவுக்குக் கொடுத்த அட்வான்ஸை திரும்பத் தரக் கோரியும், வேறு நடிகரை வைத்து இதே படத்தை எடுத்துக் கொள்ள அனுமதிக்குமாறும் கேட்டு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார் ஷங்கர் என்பது லேட்டஸ்ட் தகவல்.

Sources say that Director Shankar has stopped the shooting of Imsai Arasan 24-m Pulikesi due to Vadivelu's non cooperation.

Recommended