கலைகட்டும் அலங்காநல்லூர்..சீறிப்பாய தயாராகும் காளைகள்- வீடியோ

  • 5 years ago
தமிழக அரசானைப்படி. ஜனவரி 15 ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் . மதுரை மாவட்டம் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிகட்டு போட்டிற்கான அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியர் நடராஜன் தலைமையில், ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன், இணை ஆணையர் சசிமோகன், விழாக்கமிட்டியினர், அதிகாரிகள், உள்ளிட்டோருக்கு போட்டி நடத்துவது தொடர்பான விதிமுறைகள் மற்றும் ஆலோசனைகள், நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பது போன்ற ஆலோசனைகள் வழங்கப்பட்டது இந்த ஆலோசனை கூட்டத்தில் கோவில் மாடுகளை முதலில் அவிழ்த்து விட வேண்டும் என்றும், அதற்கு பின்பு தான் மற்ற மாடுகளை டோக்கன் முறைப்படி தான் அவிழ்த்து விட வேண்டும் என்றும், விஐபி மாடுகளுக்கு என்று முக்கியத்துவம் கிடையாது என்றும், ஜல்லிக்கட்டு காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்தப்படும் என்றும், முறைப்படிதான் டோக்கன் முறையில் தான் கண்டிப்பாக காளைகளை அழித்துவிட வேண்டும் என்றும் மாடுபிடி வீரர்கள் ஒரு சுற்றுக்கு 75 வீரர்களை அளம் இறக்க வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டு நடக்கும் மைதானத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட எல்லைவரை கண்டிப்பாக தடுப்பு வேலி வைக்கவேண்டும் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டது மேலும் நீதிமன்ற விதிகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் எனவும் .மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்

Des: The bulls are ready


Recommended