நெடுங்குளம் ஜல்லிக்கட்டில் சீறி பாய்ந்த காளைகள்!- வீடியோ

  • 6 years ago
தமிழர் திருநாளை நினைவு கூறும் வகையில் விருதுநகரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் காளைகளை அடக்கி பரிசுகளை அள்ளிச் சென்றனர். தமிழர் திருநாளை நினைவு கூறும் வகையில் பல்வேறு பகுதிகளில் ஜல்லி கட்டு போட்டி நடந்து வருகிறது. விருதுநகர் அருகே உள்ள கூமாபட்டியை அடுத்த நெடுங்குளத்தில், ஊர் சமுதாய மக்கள் சார்பில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஜல்லிக்கட்டில் 300 காளைகள் அவிழ்த்து விடப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தன.

சந்திரபிரபா எம்.எல்.ஏ. ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். வாடிவாசல் வழியே ஒவ்வொரு மாடாக அவிழ்த்து விடப்பட, அதனை 150-க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் பாய்ந்து பிடித்தனர். சில காளைகள் சீறிப்பாய்ந்து வீரர்களை திக்குமுக்காடச் செய்தன. இருப்பினும் வீரர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு காளைகளை மடக்கிப்பிடித்து பரிசுகளை வென்றனர். காளைகள் குத்தியதில் 20-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

Recommended