தேசிய விளையாட்டு தினத்தையொட்டி விளையாட்டு வீர - வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

  • 6 years ago
தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய அனைவரையும் வாழ்த்துவதாக குறிப்பிட்டார். ஆசிய விளையாட்டுகளின் பல்வேறு போட்டிகளில் இந்திய வீரர்கள் சிறந்து விளங்குகின்றனர் என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். ஆரோக்கியமான இந்தியாவுக்கு பங்களிக்கும் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகளுக்கு நாட்டு மக்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் விளையாட்டு ஆர்வலர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக அவர் பதிவிட்டிருந்தார்.

Recommended