எட்டு வழிச்சாலை நோக்கம் குறித்து அரசுகள் விளக்கம் அளிக்க- திருமா வேண்டுகோள்- வீடியோ

  • 6 years ago
எட்டு வழிச்சாலை அமைப்பதின் நோக்கம் குறித்து மத்திய மாநில அரசுகள் மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.



எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்த விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எட்டு வழிச்சாலை அமைப்பதின் நோக்கம் குறித்து, மத்திய மாநில அரசுகள் மக்களுக்கு விளக்கம் அளிப்பதுடன் சாலைக்கு எதிராக போராடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைக்கும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்றார். எட்டு வழிச் சாலையை மாற்று யோசனை திட்டத்தின் கீழ் மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் செயல்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அவினாசி அருகே சத்துணவு ஆயாவை, தாழ்த்தப்பட்டவர் என்ற காரணத்திற்காக பணிஇடை மாற்றம் செய்ததது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றதுடன் அவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சம் இன்றி கைது செய்யப்பட வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்தார். மேலும் சென்னையில் சிறுமியை பாலியல் செய்த 17 பேர் மீது, நடவடிக்கை எடுத்து கடுமையான தண்டனை வழங்க ஆவனம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Des : According to Thirumavalavan, the central government should explain to the people about the purpose of setting up eight lines.

Recommended