நீட் மரணம் திருமா விளக்கம்- வீடியோ

  • 6 years ago
மாணவியின் மரணத்திற்க்கு மத்திய மாநில அரசுகளே காரணம் என்று விடுதலை சிறுத்தகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார் . மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நீட் தேர்வினால் ஏற்பட்ட மன அழுத்ததில் விழுப்புரம் செஞ்சியை சேர்ந்த பிரதிபா ,டெல்லி மாணவன் பர்ணா ஆகியோர் தற்கொலை செய்துள்ளனர்61, 350 மருத்துவ பணியிடங்களுக்கு ஏழே கால் லட்சம் பேர் தேர்வு பெற்று , ஒரு மருத்துவ பணியிடத்திற்கு 12 பேர் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் மானவியின் மரணத்துக்கு மத்திய மாநில அரசுகளே காரணம் என்றும் தெரிவித்தார் . தொடர்ந்து பேசிய அவர் தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக அமைக்கபட்டுள்ள ஆணையத்தின் தலைவர் அருணா ஜெகதீசன் ஆளும் அரசுக்கு சாதகமானவர் என்றும் அதனால் புலானாய்வு துறையை கொண்டு சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்

Recommended