அடகு கடை உரிமையாளர் மர்ம மரணம் குழப்பத்தில் போலீஸ்- வீடியோ

  • 6 years ago
காணமல் போன நகை அடகு கடை உரிமையாளர் ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டதால் பரபரப்பு.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் எம்.ஜி ரோட்டில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ஹேமந்த்குமார். இவர் காந்தி சாலையில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். ஹேமந்த்குமார் நேற்று மாலை முதல் காணவில்லை. நகை கடையும் பூட்டி இருந்தது. அவரது செல்போனில் இருந்து நகை அடகு கடை உரிமையாளர்கள் வாட்ஸ் ஆப் குரூப்பிற்கு எனது சாவுக்கு மங்கல் சந்த் என்பவர் காரணம் என மெசேஜ் வந்துள்ளது. இதையடுத்து பல்வேறு இடங்களில் ஹேமந்த்குமாரை தேடுகையில் அவருடைய இரு சக்கர வாகனம் மட்டும் ஓசூர் மலைக்கோயில் அருகே இருந்தது. இதனால் அச்சமடைந்த அவருடைய மகள் தீபிகா ஓசூர் நகர காவல் நிலையத்தில் தந்தையை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஹேமந்த்குமாரை தேடி வந்தனர்.

இதனிடையே ஓசூர் ஜொனபண்டா என்ற கிராமத்தின் பின்புரம் உள்ள இரயில் தடத்தில் அடியாளம் தெறியாத ஒரு ஆண் சடலம் இருப்பதை அறிந்த போலீசார் ஹேமந்த்குமார் உறவினருக்கு தகவல் அளித்தனர். தகவலை அடுத்து அங்கு வந்து பார்த்த உறவினர்கள் இறந்து கிடப்பது ஹேமந்த்குமார் என்பதை உறுதி செய்தனர். அதை தொடர்ந்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஹேமந்த்குமார் உயிரிழந்தது தொடர்பாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை மர்ம நபர்கள் யாரேனும் கொலை செய்து தண்டவாளத்தில் வீசி சென்றனரா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் ஓசூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

des: The owner of the disappeared jewelry shop owner was found dead in the railway track.

Recommended