நாட்டு வெடிகுண்டுவில் சிக்கி ஆடுகள் பலி-வீடியோ

  • 6 years ago
வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட வைக்கபட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகள் வெடித்த்தில் 2 ஆடுகள் பலியானது

வேலூர் மலைப்பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் அதே பகுதியை சேர்ந்த கோதண்டரெட்டி என்பவர் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் தங்களுக்கு சொந்தமான 5 க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை மேயத்து கொண்டிருந்த போது மர்ம நபர்கள் வனவிலங்குகளை வேட்டையாட வைக்கபட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகள் திடீரென வெடித்து சிதறியுள்ளது .இதில் அருகில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளில் இரண்டு ஆடுகள் படுகாயமடைந்து துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளது .இது குறித்து தகவல் அறிந்து வந்த உமராபாத் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்தில் பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வனவிலங்குகளை வேட்டையாட வைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்

Recommended