சீரியலா? ஐபிஎல்லா? தகறாறு...கொலையில் முடிந்த அதிர்ச்சி....வீடியோ

  • 6 years ago
டிவி சீரியல் ஐபிஎல் போட்டிகளை காண்பதில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடந்த போட்டியில் தந்தையை கம்பியால் அடித்து கொன்ற மகனை போலீசார் தேடிவருகின்றனர்.

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மகன் நந்தகுமார். தந்தை மகனுக்கு இடையே கடந்த சில மாதங்களாக சொத்து பிரச்சணை இருந்துள்ளதாக தெரிகிறது. இதனால் அடிக்கடி இருவருக்கும் இடையே சண்டைகளும் எழுந்துள்ளது, இந்நிலையில் அண்ணாமலை நேற்று டிவி தொடர் பாத்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த நந்தகுமார் ஐபிஎல் போட்டி காண வேண்டும் என்று டிவியின் ரிமோட்டை அண்ணாமலையிடம் இருந்து பிடுங்கி சேனலை மாற்றியுள்ளார். அப்போது தந்தைக்கும் மகனுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையேயான மோதல் முற்றிய போது ஐபிஎல் போட்டியை பார்க்க அனுமதிக்காத தந்தை அண்ணாமலை மீது அருகில் கிடந்த கம்பியை கொண்டு நந்தகுமார் தாக்கியுள்ளார். இதில் அண்ணாமலை சம்பவ இடத்திலேயே துடிக்க துடிக்க உயிரிழந்துள்ளார். தந்தை உயிரிழந்த்தை கண்ட நந்தகுமார் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகி விட்டார். இச்சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதுடன் தலைமறைவாக உள்ள நந்தகுமாரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended