• 7 years ago
அத்தான் மேல் கொண்ட ஆசையால் சொத்துக்காகவும், கள்ளத் தொடர்பை மறைக்கவும் சொந்த அக்காவையே கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் திருப்பூரைச் சேர்ந்த இளம்பெண். இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த கள்ளக்காதலனையும், இளம்பெண்ணையும் போலீசார் கைது செய்துள்ளனர். தகாத உறவுமுறையால் நிகழ்ந்த இந்த கொலை 4 குழந்தைகளை அனாதைகளாக்கியுள்ளது. டிவி சீரியல்களிலும் சினிமாக்களிலும்தான் கூட இருந்தே குழி பறிக்கும் கதாபாத்திரங்களை பார்த்திருப்போம். ஆனால் ஆதரவற்ற நிலையில் வந்த சித்தி மகளுக்கு அடைக்கலம் கொடுத்த பெண்ணிற்கே எமனாக அமைந்து விட்ட சம்பவம் திருப்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Category

🗞
News

Recommended