குழந்தை பிறந்த சந்தோஷத்தை முழுமையாக அனுபவிக்க முடியாமல் புது அம்மாக்களை தடுப்பது, பிரசவத்திற்கு பின்னும் குறையாமல் இருக்கும் பெருத்த வயிறுதான். ஆரோக்கியமான குழந்தை வேண்டும் என்பதோடுகூட, வயிறு தளர்ந்து தொப்பையாகிவிடக்கூடாது என்றும் கர்ப்பிணிகள் விரும்புகிறார்கள். பிரசவத்திற்குப் பிறகு, வயிறு இறங்கிவிடாமல் தடுப்பதற்காக, புடவை போன்ற நீளமான துணியினால் இறுக்கமாக கட்டுவது பாரம்பரிய பழக்கம். தற்போது மெட்டனிட்டி பெல்ட், டம்மி பைண்டர் என்ற பெயரில் இதற்கான பல்வேறு வகை பெல்ட்கள் பல விலைகளில் சந்தைகளில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி, பிரசவத்துக்குப் பின் உண்டாகும் பெரிய தொப்பையைக் குறைத்துவிட முடியும் என்று நம்புகிறார்கள்.