சென்னையில் காவலர்கள் தீ குளிக்க முயன்றதால் பரபரப்பு- வீடியோ

  • 6 years ago
டிஜபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை டிஜிபி அலுவலக வளாகத்தில் தேனி மாவட்ட காவலர்கள் 2 பேர் தீக்குளிக்க முயன்றுள்ளனர்.

தேனி மாவட்ட காவலர்கள் கணேஷ், ரகு ஆகிய 2 பேரும் டிஜிபி அலுவலகம் அருகே செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தேனி மாவட்ட எஸ்பி மீது அவர்கள் இருவரும் சரமாரியாக குற்றச்சாட்டுக்களை கூறினர். தேனி மாவட்ட காவல் உயர் அதிகாரிகள் சாதி ரீதியாக ஒதுக்கி இடமாற்றம் செய்ததாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Recommended