சென்னையில் தீடிர் மழை- வீடியோ

  • 6 years ago
தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொள்ளுத்திவந்த நிலையில் நேற்று முதல் நல்ல மழை பெய்து வருகிறது சென்னையில் சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை, மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளது. கரூர் மாவட்டத்தில் மாயனூர், வேலாயுதம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. விழுப்புரம்மாவட்டம் திருக்கோவிலூரில் கனமழைபெய்து வருகிறது. தேவனூர், ஆவியூர் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் மழை பெய்து வருகிறது.


Des : Public farmers are pleased with the heavy rainfall in various parts of Tamil Nadu