சென்னையில் மழை இன்று எப்படி இருக்கும்? என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மென்?- வீடியோ
  • 6 years ago
இன்று வடகிழக்குப் பருவமழை நிறைவாக இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். சென்னை ஈசிஆர், ஓஎம்ஆர் மற்றும் தென் சென்னை ஆகியப் பகுதிகளில் மழை நின்று ஆடும் என்றும அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 25ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. வழக்கத்தை விட இந்த ஆண்டு பருவமழை ஒரு வாரம் தாமதமாக தொடங்கியது.
ஆனால் இயல்பை விடவும் இந்த ஆண்டு அதிக மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. அதன்படியே வடகிழக்குப் பருவமழை தொடங்கிய ஓரிரு நாட்களிலேயே தீவிரமடைந்து.சென்னை உட்பட கடலோர மாவட்டங்கள், காவிரி டெல்டா பல இடங்களில் சராசரியாக 10 சென்டி மீட்டருக்கு மேல் பெய்து வருகிறது. இதுவரை அதிகளவாக சீர்காழியில் 31 சென்டி மீட்டரும் சென்னை மெரினாவில் 30 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

Chennai Rain Update - As posted earlier, the cloud mass from Delta shifted close to Chennai and ECR, OMR and South Chennai are getting steady rains. Its going to be the perfect monsoon weekend to start with drizzly type rains - Tamilnadu weatherman
Recommended