ஏர்டெல், வோடாபோன் அவுட். ஜியோதான் காரணமா?

  • 6 years ago
நேற்றிலிருந்து நிலவி வரும் சிக்னல் பிரச்சனைக்கு ஏர்டெல், வோடாபோன் நிறுவனங்கள் தற்போது விளக்கம் கொடுத்துள்ளது. விரைவில் இந்த பிரச்சனை தீர்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஏர்டெல் மற்றும் வோடாபோனில் நேற்று இணையம் மட்டுமே எடுக்காமல் இருந்தது. ஆனால் இன்று காலையில் இருந்து பலருக்கும் போன் பேசுவது கூட தடைபட்டு இருக்கிறது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இன்று இந்த பிரச்சனை சரியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று காலையும் சிக்னல் பிரச்சனை தொடர்ந்தது. தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியாவின் ஆறுக்கும் அதிகமான பெரிய நகரங்களில் சிக்னல் வேலை செய்யவில்லை. வோடபோன் மொத்தமாக பலருக்கு எடுக்காமல் போனது. இதற்கு விளக்கம் தெரிவித்து ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு நேற்று இரவு குறுந்தகவல் அனுப்பி இருக்கிறது. அதில் ஏர்டெல் நிறுவனத்தின் கணினி சர்வர்களை அப்டேட் செய்த காரணத்தால் இந்த் பிரச்சனை ஏற்பட்டதாக கூறியுள்ளது. ஆனால் இன்றும் பிரச்சனை தொடர்கிறது. அதேபோல் வோடாபோன் நிறுவனமும் இதற்கு விளக்கம் அளித்துள்ளது. அவர்கள் அளித்த விளக்கத்தில் ''இது தற்காலிக பிரச்சனை மட்டுமே. நாங்கள் இதை சரி செய்ய முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம். விரைவில் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்'' என்றுள்ளனர். வோடபோன், ஏர்டெல் வேலை செய்யாமல் போனதற்கு ஜியோதான் காரணம் என்று பலரும் கூறியுள்ளனர். ஏர்செல் போலவே பிரச்சனை வரப்போகிறது என்றுள்ளனர். ஆனால் சர்வர்களை மாற்றியது, வட்டார சிக்னல் சர்வர்களை மாற்றுவது உள்ளிட்ட காரணங்களால் இப்போது சிக்னல் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.

Airtel and Vodafone networks are down to most of the user in India. Airtel and Vodafone gave an explanation to this issue. They said that, due to change in server and update, the problem has occurred.

Recommended