• 8 years ago
வட்டியில் என்ன கந்து வட்டி? அந்த வட்டி? இந்த வட்டி? மலையாளிகள், மார்வாடிகள் கொடுத்தால் அதற்கு பேரு பைனான்ஸ்... தமிழன் கொடுத்தால் கந்து வட்டியா? முத்தூட் பைனான்ஸ் என்றுதான் போடுகிறீர்கள்.. முத்தூட் கந்து வட்டி என்றா போடுகிறீர்கள்? எங்க இருந்து இந்த வார்த்தையை கண்டுபிடிக்கிறீங்க?

வட்டி என்பது வட்டிதான்... ஏழை எளிய மக்கள் உழைக்கும் மக்கள் குறைந்த வட்டியில் கடன் பெறுவதற்கு அரசு ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறதா? எதுவும் இல்லாத மக்கள் பிள்ளைகளை படிக்க வைக்க என்ன செய்வார்கள்? பிள்ளையை கட்டி கொடுக்க ரூ5 லட்சம் வேண்டும் என்றால் என்ன செய்வார்கள்? வட்டிக்குத்தான் வாங்க முடியும்.

அந்த வட்டிக்கு நீங்க வைக்கிற பெயர் கந்து வட்டி. இவ்வளவுதான் வட்டி கொடுக்க வேண்டும் என அரசு முறைப்படுத்துமா? உரிய சட்டம் கொண்டு வருமா?

நானே என் தம்பி ராசு மதுரவனுக்கு ரூ20 லட்சம் வட்டிக்கு வாங்கி கொடுத்தேன்..அதுக்கு பின்னாடிதான் முத்துக்கு முத்தாக படமே வெளிவந்தது. ராசு மதுரவன் இறந்ததால் நானும் தம்பி சிவகுமாரும் அந்த கடனை சிறு சிறுக அடைத்தோம்.

உண்மை நிலையைச் சொன்னால் அன்பு செழியன் இல்லையெனில் இங்கே பலபேர் திரைப்படமே எடுக்க முடியாது. அன்புச் செழியன் யாரிடமும் என்கிட்ட வந்து பணம் வாங்கு என கூறவில்லை. நாமதான் விரும்பிப் போய் வாங்குகிறோம். பல சாமானியர்களை நம்பி அன்பு செழியன் பல கோடி ரூபாய் பணம் கொடுத்திருக்கிறார். அரசு வங்கியே ரூ1 லட்சம் கடனுக்கு கட்டி வைத்து அடிக்கவில்லையா? கடனை கொடுத்தவர் கேட்கிற முறையில் கடுமை கேட்கிற போது தன்மான இழப்பாக கருதி உயிரிழப்பு ஏற்படுகிறது. அன்பு செழியன் போன்றவர்கள் பணம் கொடுக்க முடியாது என கூறிவிட்டால் திரைப்படமே எடுக்க முடியாத நிலைதான் உருவாகும்.

Naam Thamizhar party Chief Co-ordinator Semaan has supported to the controversial film financier Anbu Chezhiyan.

Category

🗞
News

Recommended