மெர்சல் விவகாரம் சுபம்.. தமிழிசை பரபரப்பு பேட்டி-வீடியோ

  • 7 years ago
களத்தில் போராடுங்கள், இணையதளத்தில் போராட வேண்டாம் என்றுதான் நாங்கள் கூறிவருகிறோம். இணையதளத்தில் சொந்த அடையாளங்களை மறைத்து, தனி மனித தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தவறான அரசியல். எதிர்க்கருத்துக்களை சொல்ல எங்களுக்கும் உரிமையுள்ளது. கருத்து சுதந்திரம் என்பது பதில் கருத்தை தெரிவிப்பதற்கும் பொருந்தும்.

எனது தொலைபேசி எண்ணுக்கு கொலைமிரட்டல்கள் வருகின்றன. இரவு முழுக்கவும் கூட போன் அடித்துக்கொண்டே உள்ளது. கொலை செய்துவிடுவோம், எரித்துவிடுவோம் என்றெல்லாம் மிரட்டுகிறார்கள். இதற்கெல்லாம் நான் அஞ்சும் ஆள் இல்லை. இருப்பினும், தமிழக அரசியல் சூழ்நிலையை நினைத்தால் கவலையாகத்தான் உள்ளது.

தனிப்பட்ட விமர்சனங்களை யாரும் முன்னெடுக்க கூடாது. மோடி போன்ற ஒரு மாபெரும் தலைவரை விமர்சனம் செய்வதில் நாகரீகம் தேவை. நாகரீக அரசியலுக்கு துணை போவோர்கள்தான் நாங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். மெர்சல் பிரச்சினை குறித்து நிருபர்கள் கேட்டபோது, மெர்சல் விவகாரம் கட் செய்யப்பட்டுவிட்டது. எல்லாம் சுபமாக முடிந்துவிட்டது என்றார் அவர்.

Tamilisai says Mersal issue gets over. Tamilisai complaints social media abuse over her

Recommended