குரங்கணி மலையேற்ற பயிற்சிக்கு சென்றிருந்த போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் சிக்கி ஒன்பது பேர் வரை உயிரிழந்தார்கள். தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்ட போது அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சையின் பலன் அளிக்காமல் மேலும் மூன்று உயிரிழக்க இந்த தீவிபத்தின் பலி எண்ணிக்கை பதிமூன்றாக உயந்திருக்கிறது. அதோடு இன்னும் சிலர் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மனதை உலுக்கு இந்த சோக நிகழ்வு குறித்த செய்திகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கடந்து வருகிறோம். அதில் செய்திகளில் தவறாமல் இடம் பிடித்த விஷயம் 60 சதவீத தீக்காயம் 80 சதவீத தீக்காயம், 100 சதவீத தீக்காயம் என்று சொல்லியிருப்பார்கள்.