• 7 years ago
இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுவதை அடுத்து குறும்பட லட்சுமி சந்தோஷமில்லாத மகளிர் தினம் என்ற ஒரு கருத்துடன் பெண்களுக்கு உண்மையான எதிரி யார் என்பதை வீடியோவாக எடுத்து பதிவு செய்துள்ளார். இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நடிகை லட்சுமி பிரியா ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். இவர் குறும்படம் லட்சுமி என்பதில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். அந்த வீடியோவில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு எப்போதும் ஆண்களே காரணமா என்றும் இதற்கு என்னதான் தீர்வு என்றும் கேட்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: ஒரு பெண்ணாக பிறந்தால் ஆதிக்கம் செலுத்தும், கொடுமை செய்யும், குறை காணும் இந்த ஆண்களால் எவ்வளோ பிரச்சினைகள். நம்மை ஒழுங்காக நடத்துமாறு எவ்வளவு வருஷமா கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

Short film heroine Lakshmi Priyaa gives International Women's day message that she feels unhappy women's day. Are men always the reason for problems that women face? Or what exactly is a solution to most of these problems?

Category

🗞
News

Recommended