தமிழகத்தில் போலீசார் உஷார்.. ரவுடிகள் தப்பியோட்டம்…வீடியோ

  • 6 years ago
என்கவுண்டரால் கொல்லப்பட்ட இருளாண்டியின் மனைவி மற்றும் உறவினர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையில் சிக்கந்தர் சாவடிப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பல்வேறு கொலை கொள்ளை வழக்கில் தொடர்புடைய ரவுடிகள் பதுங்கியுள்ளதாகவும் அவர்கள் மதுரையில் உள்ள முக்கிய பிரமுகர் ஒருவரை கொலை செய்ய திட்டம் தீட்டி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ரவுடிகளை பிடிக்க எஸ்பி மணிவண்னன் தனிப்படைகளை அமைத்தார். தனிப்படை போலீசார் நேற்று மாலையில் ரவுடிகள் தங்கியிருந்த வீட்டை சுற்றி வைத்தனர். அப்போது வீட்டுக்குள் பதுங்கியிருந்த ரவுடிகள் போலீசார் தங்களை சுற்றி வளைத்ததை கண்டு போலீசாரை தாக்கி தப்ப முயன்றுள்னர்.

Recommended