வழிவிடவில்லை என பொதுமக்களை அரிவாளால் வெட்டிய ரவுடிகள்...வீடியோ

  • 7 years ago
சாலையில் செல்லும் போது இரு சக்கர வாகனத்திற்கு வழிவிடவில்லை என்று இரண்டு பெண்கள் உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய இளைஞர்களை அந்த வழியே சென்று கொண்டிருந்த இளைஞர்கள் பிடித்து அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். பொதுஇடத்தில் ஏதாவது ஒரு வன்முறை சம்பவம் நடந்தால் அதனை மக்கள் வேடிக்கை மட்டுமே பார்ப்பார்கள், வேறு எதுவுமே செய்யமாட்டார்கள் என்பது தான் சமூக விரோத கும்பலுக்கு இன்று வரை இருக்கும் தில். அப்படி அசால்ட்டாக இருக்க வேண்டாம் தேவைப்பட்டால் களத்தில் இறங்குவோம் என்பதை நிரூபித்துள்ளனர் நாகர்கோவில் இளைஞர்கள். நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் 3 ரவுடிகள் பயங்கர ஆயுதத்துடன் சென்றுள்ளனர். அப்போது சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள் பைக்கிற்கு வழிவிடவில்லை என்று கூறி காரில் சென்ற ஒருவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

ரத்தினம் என்பவர் தன்னுடைய குடும்பத்தினருடன் புத்தாலத்திற்கு உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது ரவுடிகள் பைக்கிற்கு வழிவிடவில்லை என்று ஆபாச வார்த்தைகளில் திட்டியுள்ளனர் அந்த ரவுடிகள். இதனை தட்டிக் கேட்க சென்றவரை அரிவாளால் தாக்கியதோடு, மற்றொரு நபரையும் துரத்தி அரிவாளால் தலையில் வெட்டியுள்ளனர்.

ரவுடிகளின் இந்த திடீர் தாக்குதல் சம்பவத்தால் காரில் இருந்த 2 பெண்கள் உள்பட 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தப்பை தட்டிக் கேட்க சென்றவரிடம் அடாவடி செய்த ரவுடிகளின் செயல் அந்தப் பகுதி மக்களை வெகுண்டெழ வைத்துள்ளது.




Nagercoil youth thought a lesson to anti social elements which attA@cked public without any reason, after beaten by public rowdies begged for their life and after that handed over to Police.

Recommended