ஸ்ரீதேவியின் உடலுக்கு மீண்டும் போஸ்ட் மார்டம்!- வீடியோ

  • 6 years ago
தேவைப்பட்டால் ஸ்ரீதேவியின் உடலுக்கு மீண்டும் போஸ்ட் மார்டம் செய்ய துபாய் போலீஸ் திட்டமிட்டுள்ளது. திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி மதுபோதையில் குளியல் தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிர் இழந்தார். சனிக்கிழமை மாலை இறந்த ஸ்ரீதேவியின் உடல் அல் குசைஸில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீதேவியின் வழக்கை துபாய் போலீஸ் பிராசிகியூஷன் விசாரித்து வருகிறது. அவர்களுக்கு ஸ்ரீதேவியின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். ஸ்ரீதேவியின் உடல் இன்றாவது இந்தியா கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்குகள் செய்யப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Recommended