புகார் கொடுப்பதை தடுத்த போலீஸ்..தூத்துக்குடியில் மீண்டும் பரபரப்பு- வீடியோ

  • 6 years ago
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க சென்றபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே 22ஆம் தேதி மக்கள் தன்னெழுச்சியாக வெகுண்டெழுந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்த திரண்டு வந்தபோது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது.
இதில் 13 பேர் உயிரிழந்தனர் மேலும் சுமார் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சேதமாகின. இந்நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு மற்றும் தெர்மல் ராஜா உட்பட ஏழுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஸ்டெர்லைட் நிறுவனம் கடந்த இரண்டு மூன்று நாட்களாக சில பத்திரிகைகளில் கொடுக்கின்ற விளம்பரம் குறித்தும், ஏற்கனவே உயிரைப் பறி கொடுத்துள்ள தங்களுக்கு மீண்டும் கோபத்தை ஏற்படுத்துவதாகவும், ஆலை மீண்டும் திறப்பதற்கான உத்திகளை கையாள்வதாகவும் எனவே இந்த முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் மனு கொடுக்க சென்றனர். அப்போது அவர்களை போலீசார் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் நுழைவு வாயில் பகுதியில் வாகனத்தை நிறுத்த கூறியதுடன் உள்ளே அனுமதிக்க முடியாது எனவும் முதலில் காவல் நிலையம் சென்று விட்டு பின்னர் வாருங்கள் என்று போலீசார் கூறியுள்ளனர் இதனால் போலீசாருக்கும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபுவுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. அதன் பின்னர் பணியில் இருந்த போலீசார் உயரதிகாரிகளிடம் அனுமதி பெற்று அவர்களை புகார் கொடுக்க அனுமதித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Recommended