கார்த்தியின் படப்பிடிப்பை மகன் தேவுடன் பார்த்து ரசித்த சூர்யா

  • 6 years ago
கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படப்பிடிப்பை தனது மகன் தேவுடன் சேர்ந்து பார்த்து ரசித்துள்ளார் சூர்யா. பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி விவசாயியாக நடித்து வரும் படம் கடைக்குட்டி சிங்கம். அந்த படத்தில் சயீஷா சைகல், ப்ரியா பவானிசங்கர் என்று இரண்டு ஹீரோயின்கள் உள்ளனர். சூரி, சத்யராஜ், பானுப்ரியா உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

கார்த்தி விவசாயியாக நடிக்கும் இந்த படத்தை அண்ணன் சூர்யா தனது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

Suriya has visited Kadaikutty Singam sets with his son Dev. Father, son duo watched Karthi acting in Rekla race scene. Suriya is producing the movie through his 2D entertainment.

Recommended