நெல்லையில் குடிக்கவைத்து கழுத்தை நெரித்து கொலை.. குற்றவாளிகளுக்கு வலைவீச்சு

  • 6 years ago
நெல்லை மாவட்டம், பாளையம்கோட்டையில் மது குடிப்பதில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாளையங்கோட்டை மணக்காவலம்பிள்ளை நகரைச் சேர்ந்தவர் விக்டர். அப்பகுதியில் ஓர்க் ஷாப் நடத்தி வந்தார். இவரது ஓர்க் ஷாப்புக்கு அவரது நண்பர்களா ராஜாசிங், ஆனந்தராஜ் மற்றும் சிலர் இரவு நேரத்தில் வந்து மது குடிப்பது வழக்கம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் வழக்கம் போல் மதுகுடிப்பதற்கு வந்த அவரது நண்பர்கள் திடீரென தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் ராஜாசிங்கை வெட்டியதுடன் விக்டரையும் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ராஜாசிங் நெல்லை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் ராஜாசிங்கிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் முன்னுக்கு பின்னாக தகவல் தெரிவித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை தீவிரமாக விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் வெளியானது. போதையில் தகராறு ஏற்பட்டதால் ராஜாசிங்கை வெட்டியதால் ஆனந்தராஜை தீர்த்து கட்ட திட்டம் போட்டு அவருக்கு கூடுதலாக மது கொடுத்துள்ளனர். போதை தலைக்கு ஏறியதும் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளனர். பின்னர் கொலையை மறைப்பதற்காக சீவலப்பேரி ஆற்றுக்கு சென்று இரவோடு இரவாக வீசி விட்டு சென்றதாக கூறியுள்ளார். இதையடுத்து விரைந்து சென்ற போலீசார் ஆனந்தராஜ் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பாளை போலீசார் மேலக்குளம் நடுவூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரபாகர், ராஜாசிங், பாலா, பரவீத், ராஜீவ்காந்தி, சேகர் உள்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


In a clash in Nellai, a youth was killed by his friends while he was drinking liquor with them.

Recommended