2018 பட்ஜெட்டில் பெட்ரோல் டீசல் மீது கலால் வரிவிலக்கு கோரும் பெட்ரோலியத்துறை- வீடியோ

  • 6 years ago
நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் 2018 - 19ம் நிதியாண்டிற்கான நிதிஅறிவிப்பில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரிக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பெட்ரோலியத்துறை அமைச்சகம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. நிதித்துறை அமைச்சம் தான் இது குறித்து முடிவு எடுக்கும் என்பதால் பரிந்துரை வைக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலியத் துறையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2019ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி அரசின் ஆட்சிக் காலம் முடிவடையும் நிலையில், அடுத்த ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இது மட்டுமின்றி சில மாநில சட்டசபை தேர்தல்களும் நடைபெற உள்ளன. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் சில்லறை விலையில் அதிக உச்சத்தை எட்டி வருவது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு ஆசிய நாடுகளிலேயே அதிகபட்சமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதற்கு முக்கிய காரணம் அதன் மீது விதிக்கப்படம் 40 முதல் 50 சதவீதம் வரையிலான வரி.

Petroleum ministry seeks excise duty exemption for petroleum products in the budget 2018 as the people facing more price hike and also recommended to combine petroleum products, natural gas and jet fuel under GST

Recommended