பெட்ரோல் டீசல் விலை குறைவு! அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேட்டி- வீடியோ
  • 6 years ago
பெட்ரோல் டீசல் விலை! அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைத்திருப்பது மூலம் மக்களுக்கு மிகப்பெரிய சுமை நீங்கியது என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்





திருச்சியில் தனியார் கல்லூரி மற்றும் தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் நடை பெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்த மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் பேசுகையில்

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது.அதேபோல பா.ஜ.க ஆளும் 13 மாநில அரசுகள் பெட்ரோல் விலையை ஏற்கனவே ரூ.2.50பைசா குறைத்துள்ளது. எனவே அந்த மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலை 5 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைத்திருப்பது மூலம் மக்களுக்கு மிகப்பெரிய சுமை நீங்கியது. கடந்த நான்கு ஆண்டுகளில் மக்களுக்கு தேவையான குடிநீர், மின்சாரம், எரிவாயு, கழிவறை ஆகிய அடிப்படை வசதிகள் இருமடங்காக உயர்த்தப்பட்டு உள்ளது. இது ஆளும் பா.ஜ.க அரசின் மிகப்பெரிய சாதனை என்றார்.



Des: Union Minister of Human Resource Development Prakash Javadekar said that the government has taken a huge burden on the government by cutting petrol diesel prices.
Recommended