மீண்டும் 1 கோடி சம்பளம் பெறும் ராஜமௌலியின் அப்பா...

  • 6 years ago
வசூலில் உலகம் முழுவதும் பல புதிய சரித்திரம் படைத்த 'பாகுபலி' படத்தின் கதையை எழுதியவர் விஜயேந்திர பிரசாத். 'பாகுபலி' படத்தின் இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமௌலியின் அப்பாவான இவர், பாகுபலி படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 'மெர்சல்' படத்தின் கதையிலும் தன் பங்களிப்பு செய்தார். 'மெர்சல்' படத்திற்காக விஜயேந்திர பிரசாத்துக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்தப் படங்களை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்திற்கு கதை எழுத ஒப்புக் கொண்டிருக்கிறார் விஜயேந்திர பிரசாந்த். லாரன்ஸின் 'காஞ்சனா 3' படத்திற்குப் பிறகு இந்தப் படம் உருவாக இருக்கிறது. லாரன்ஸ் நடிக்கவிருக்கும் இந்தப் படம் தெலுங்கில் உருவாகிறது. தமிழில் டப் செய்து வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர். மகாதேவ் என்பவர் இப்படத்தை இயக்குகிறார்.

Vijayendra Prasad is the story writer of the film 'Baahubali', which has created many records throughout the world. vijayendra prasad is the father of SS Rajamouli, the director of 'Baahubali'. Currently, Vijayendra Prasad has agreed to write a story to Raghava Lawrence's film. Vijayendra Prasad has been getting 1 crore salary for this film.

Recommended